இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர்கண்டன ஆர்ப்பாட்டம்


இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர்கண்டன ஆர்ப்பாட்டம்
x

இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

திருப்பூர்

திருப்பூர்

இந்திய கம்யூனிஸ்டு கட்சி மற்றும் ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன் நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாநகர் மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். இதில் சுப்பராயன் எம்.பி. கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். மத்திய அரசின் பட்ஜெட்டில் நலிந்து வரும் பனியன், விசைத்தறி உள்ளிட்ட சிறு, குறு நடுத்தர தொழில்களை பாதுகாத்திட எந்த திட்டமும் இல்லை, நிதியும் ஒதுக்கப்படவில்லை. ஜி.எஸ்.டி. உள்பட பல்வேறு வரிகள் மூலம் அதிக நிதி வழங்கும் தமிழ்நாட்டிற்கு மிக குறைந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பன்னாட்டு பெரு நிறுவனங்கள் கொள்ளையடிப்பதற்கு ஆதரவாகவும், ஏழை, எளிய மக்களுக்கு பாதகமாகவும் பல்வேறு அம்சங்கள் பட்ஜெட்டில் உள்ளன. அதானியின் மோசடிகளை விசாரிக்க நாடாளுமன்ற விசாரணைக்குழுவை அமைக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநகராட்சி துணை மேயர் பாலசுப்பிரமணியம், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் ரவி, ஏ.ஐ.டி.யு.சி. மாநில செயலாளர் சேகர், மாவட்ட தலைவர் மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.



Related Tags :
Next Story