மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருப்பூர்

முத்தூர்

திருப்பூர் மாவட்டம் முத்தூர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கரட்டுப்பாளையத்தில் குடிநீர் குழாய் இணைப்பு உடனடியாக வழங்க கோரியும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை பேரூராட்சிக்கு ஏற்படுத்த கோரியும், பாரதி வீதியில் தார்ச்சாலை அமைக்க கோரியும், ஜீவா நகர், மலையத்தாபாளையம், திருவள்ளுவர் வீதியில் சுகாதார வசதி ஏற்படுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று காலை நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிளை செயலாளர்கள் எம்.சுப்பிரமணி (கரட்டுப்பாளையம்), எஸ்.துரைசாமி (தொட்டியபாளையம்) ஆகியோர் தலைமை தாங்கினார்கள். இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ஆர்.குமார், அகில இந்திய விவசாயிகள் தொழிற்சங்க மாவட்ட செயலாளர் ஏ.பஞ்சலிங்கம் தீண்டாமை ஒழிப்பு முன்னணி பி.செல்லமுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தாலுகா குழு உறுப்பினர்கள் எஸ்.தங்கவேல், எஸ்.பழனியம்மாள், ஜனநாயக மாதர் சங்க ஆர்.மல்லிகா, எஸ்.வேலுமணி உட்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முடிவில் கிளை செயலாளர் கிட்டுச்சாமி நன்றி கூறினார்.


Related Tags :
Next Story