கலெக்டர் அலுவலகம் முன்பு 26-ந்தேதி தர்ணா


கலெக்டர் அலுவலகம் முன்பு 26-ந்தேதி தர்ணா
x

கோரி்க்கைகளை நிறைவேற்றக்கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு வருகிற 26-ந்தேதி தர்ணா போராட்டம் நடத்தப்போவதாக அரசு ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.

தஞ்சாவூர்


கோரி்க்கைகளை நிறைவேற்றக்கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு வருகிற 26-ந்தேதி தர்ணா போராட்டம் நடத்தப்போவதாக அரசு ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.

கருத்தரங்கம்

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் நேற்று தஞ்சையில் எழுச்சி தின கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்குக்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ரெங்கசாமி வரவேற்றார். மாநில தலைவர் அன்பரசு, முன்னாள் மாநில செயலாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.கருத்தரங்குக்கு பின், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் தஞ்சை மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் அனைத்து மாவட்டத்திலும் எழுச்சி நாள் கருத்தரங்கம் நடத்தப்பட்டு வருகிறது. தமிழக அரசு புதிதாக பதவி ஏற்ற பின்னாலே, எதிர்க்கட்சியாக இருந்த போது கொடுத்த வாக்குறுதிகளையும், தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதிகளையும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என்பதற்கான ஆயத்த கூட்ட ஏற்பாடு தான் இந்த எழுச்சி தின கருத்தரங்கம் ஆகும்.

தர்ணா போராட்டம்

இந்த அரசு உடனடியாக அரசு ஊழியர் சங்கத்தின் நிர்வாகிகளை அழைத்து பேசி, தேர்தல் கால வாக்குறுதிகளை புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்வது, காலமுறை ஊதியம் பெறாத சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள், கிராமப்புற செவிலியர்கள், நூலக பணியாளர்களுக்கு உடனடியாக காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.3 சதவீத அகவிலைப்படியை உடனடியாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும். முடக்கப்பட்ட விடுப்பு சரண்டரை விடுவித்திட வேண்டும், இந்த கோரிக்கைகளை உடனடியாக தீர்த்து வைக்க வேண்டும். இதற்கும் தமிழக அரசு உடன்பட்டு பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்றால், வருகிற 26-ந் தேதி மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் முன்னால் அரைநாள் தர்ணா போராட்டமும், அதற்கு அடுத்தாற்போல் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 23-ந் தேதி சென்னையில் கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறவுள்ளது. அதற்குள் நிர்வாகிகளை அழைத்து பேசி கோரிக்கைகளை தீர்த்து வைக்க வேண்டும்" என்றார்.


Next Story