திருச்செந்தூரில் கண்டன ஆர்ப்பாட்டம்


திருச்செந்தூரில் கண்டன ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 24 July 2023 12:15 AM IST (Updated: 24 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பழங்குடியின பெண்கள் மீதான தாக்குதலை கண்டித்து திருச்செந்தூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் பவத்சிங் பஸ்நிலையம் அருகே மணிப்பூர் கலவரத்தில் பழங்குடியின பெண்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மற்றும் பாலியல் ரீதியான கொடுமைகளை கண்டித்து அனைத்து கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. சமூக ஆர்வலர் தோப்பூர் தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார். ம.தி.மு.க. மாவட்ட பொருளாளர் காயல் அமானுல்லா, விடுதலை சிறுத்தைகள் கட்சி தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் முரசு தமிழப்பன், திராவிடர் தமிழர் கட்சி மாநில நிதி செயலாளர் சங்கர், ஆதித்தமிழர் கட்சி மாவட்ட பொறுப்பாளர் கில்பு, காயல் சமூக நீதி பேரவை செயலாளர் வக்கீல் அகமது சாஹிப், திராவிடர் கழகம் காப்பாளர் ராஜந்திரன், தந்தை பெரியார் திராவிடர் கழகம் மாவட்ட பொறுப்பாளர் கட்டபொம்மன், விடுதலை சிறுத்தைகள் கட்சி சமூக நல்லிணக்கப் பேரவை மாவட்ட அமைப்பாளர் தமிழ்பரிதி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்ட துணை செயலாளர் ராஸிக்முஸ்மில், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மாவட்ட பொருளாளர் அன்சாரி, தி.மு.க. ஆதிதிராவிடர் அணி பொறுப்பாளர் அமுதன், காங்கிரஸ் கட்சி எஸ்.சி.- எஸ்டி அணி பொறுப்பாளர் வக்கீல் சந்திரபோஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story