வருகிற 21-ந் தேதி ஆர்ப்பாட்டம்


வருகிற 21-ந் தேதி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 8 Jun 2022 6:30 PM GMT (Updated: 2022-06-09T00:01:19+05:30)

கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 21-ந் தேதி ஆர்ப்பாட்டம் ஏ.ஐ.டி.யூ.சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

திருவாரூர்

நீடாமங்கலம்:

நீடாமங்கலம் ஒன்றிய உள்ளாட்சித்துறை பணியாளர் சம்மேளன ஏ.ஐ.டி.யூ.சி. கூட்டம் ஒன்றிய தலைவர் ஏ.வேதமாணிக்கம் தலைமையில் நடந்தது. மாவட்ட தலைவர் பி.சாந்தகுமார், ஒன்றிய செயலாளர் ரமேஷ் ஆகியோர் பேசினர். 10.5.2000-க்கு முன்பும், பின்பும் பணி அமர்த்தப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்களுக்கு 7-வது ஊதிய குழு பரிந்துரைப்படி நிலுவைத்தொகை வழங்க ஆணை பிறக்கப்பட்டுள்ளது.. ஆனால், எந்த ஊராட்சியிலும் இதனை நடைமுறைப் படுத்தவில்லை. அதேபோல, துப்புரவு பணியாளர்களுக்கும் நிலுவைத்தொகை வழங்கப்படவில்லை. ஆகவே, இந்த நிலுவைத் தொகையை உடனடியாக வழங்கக்கோரியும், பணியாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கிட கோரியும், ஒவ்வொரு மாதம் 5-ந் தேதிக்குள் சம்பளம் வழங்கிட கோரியும் மாநில குழு எடுத்த முடிவின்படி வருகிற 21-ந் தேதி திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் அனைத்து பணியாளர்களும் கலந்துகொள்வது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் சங்க நிர்வாகி ஆரோக்கியசாமி நன்றி கூறினர்.


Next Story