இந்து முன்னணி சார்பில் போராட்டம் நடத்த முடிவு
தொழிற்பேட்டை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணி சார்பில் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
ஒட்டன்சத்திரம் தாலுகா கள்ளிமந்தையம் அருகே உள்ள ஈசக்காம்பட்டியில், பழனி முருகன் கோவிலுக்கு சொந்தமான கோசாலையை இந்து முன்னணி மாநில பொதுபொதுச்செயலாளர் செந்தில்குமார் நேற்று பார்வையிட்டார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், பழனி முருகன் கோவிலுக்கு சொந்தமான 219 ஏக்கர் நிலம் மற்றும் 1,200 ஏக்கர் விவசாய நிலங்களை கையகப்படுத்தி ஈசக்காம்பட்டியில் தொழிற்பேட்டை அமைக்கும் தமிழக அரசின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. நிலங்களை கையகப்படுத்தவது குறித்த கலெக்டரின் உத்தரவை திரும்ப பெற வேண்டும். கோவில் நிலம் மற்றும் விவசாய நிலங்களை அபகரித்து தொழிற்சாலை அமைக்க தி.மு.க. முயற்சிப்பதில் நியாயம் இல்லை.தொழிற்பேட்டை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணி சார்பில் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.சட்ட ரீதியாகவும், ஜனநாயக ரீதியாகவும் விவசாயிகள், பக்தர்களை ஒன்று திரட்டி போராட்டம் நடத்துவோம் என்றார்.
பேட்டியின்போது பா.ஜ.க. முன்னாள் மாவட்ட தலைவர் பழனிச்சாமி, இந்து முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சதீஷ், மாவட்ட தலைவர் பிரதீப்குமார், மாவட்ட பொருளாளர் பாலா மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.