சாலை மறியல்- முற்றுகை போராட்டம் ஒத்திவைப்பு


சாலை மறியல்- முற்றுகை போராட்டம் ஒத்திவைப்பு
x
தினத்தந்தி 31 March 2023 1:00 AM IST (Updated: 31 March 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

சாலை மறியல்- முற்றுகை போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

நாகப்பட்டினம்

வேதாரண்யம் அருகே உள்ள பஞ்சநதிக்குளம் நடுச்சேத்தியில் கொடுவாய்குளம் நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்றுவதை ஒரு பிரிவினர் தடுப்பதை கண்டித்து மருதூர் கடைத்தெருவில் ஊராட்சி பொதுமக்கள் சார்பில் சாலை மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டது. அதேபோல் பஞ்ச நதிக்குளம் மேலச்சேத்தியில் ஆதிதிராவிடர் வகுப்பை சேர்ந்தவர்கள் பயன்படுத்தும் சுடுகாட்டுக்கு அருகில் மணல் எடுப்பதாகவும் இதனால் சுடுகாட்டிற்கு செல்ல முடியாத நிலை ஏற்படும் என கூறி பஞ்சநதிக்குளம் மேற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் தாலுகா அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இருதரப்பினரும் போராட்டம் அறிவித்திருந்த நிலையில் நேற்று வேதாரண்யம் தாலுகா அலுவலகத்தில் சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் நடந்தது. இதற்கு தாசில்தார் ஜெயசீலன் தலைமை தாங்கினார். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து இரு தரப்பினரும் போராட்டத்தை ஒத்தி வைத்தனர். பேச்சுவார்த்தையையொட்டி வேதாரண்யம் துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல் தலைமையில் இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story