எம்.ஆர்.பி. செவிலியர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி முதல்-அமைச்சருக்கு தபால் அனுப்பும் போராட்டம்


எம்.ஆர்.பி. செவிலியர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி முதல்-அமைச்சருக்கு தபால் அனுப்பும் போராட்டம்
x

எம்.ஆர்.பி. செவிலியர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி முதல்-அமைச்சருக்கு தபால் அனுப்பும் போராட்டம்

மதுரை


ஒப்பந்த முறையில் பணி செய்யும் எம்.ஆர்.பி. செவிலியர்களை, தமிழக அரசு உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு எம்.ஆர்.பி. செவிலியர் மேம்பாட்டு சங்கத்தின் சார்பில் முதல்- அமைச்சருக்கு, தபால் அட்டை அனுப்பும் போராட்டம் மதுரையில் நடந்தது. இதில், மாநில இணை செயலாளர் சுஜாதா, மதுரை மாவட்ட தலைவர் ராஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு, தபால் அட்டை அனுப்பினர். இதுபோல், மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் ஏராளமானவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி தபால் அட்டை அனுப்பினர்.

இதுகுறித்து மாநில இணை செயலாளர் சுஜாதா கூறுகையில், எம்.ஆர்.பி. செவிலியர்களின் கோரிக்கைகளை கடந்த 7 வருடங்களாக நிறைவேற்றாமல் உள்ளது. தேர்தல் அறிக்கையில் கூட ஒப்பந்த செவிலியர்கள் நிரந்தம் செய்யப்படுவார்கள் என தி.மு.க. அறிவித்தது. ஆனால், தற்போது வரை அதனை செய்யவில்லை. எங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி, வருகிற 12-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்களை சந்தித்து கோரிக்கை மனுக்கள் வழங்குவது என்றும், டிசம்பர் மாதம் 16-ந்தேதி கலெக்டர் அலுவலகம் முன்பும் ஆர்ப்பாட்டம் மற்றும் ஜனவரி மாதம் 31-ந்தேதி சென்னையில் காத்திருப்பு போராட்டம் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா காலகட்டத்தில் மக்களுக்கு சிறப்பாக சேவை வழங்கி இருக்கிறோம். ஆனால், எங்களுக்கு கிடைக்க வேண்டிய அடிப்படை ஊதியம் கூட வழங்கப்படாமல் இருப்பதால் செவிலியர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது என்றார்.


Next Story