குடிநீர் வழங்காததை கண்டித்து பெண்கள் காலி குடங்கள் மறியல்


குடிநீர் வழங்காததை கண்டித்து பெண்கள் காலி குடங்கள் மறியல்
x

திருப்பத்தூரில் குடிநீர் வழங்காததால் நகராட்சியை கண்டித்து பெண்கள் காலி குடங்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பத்தூர்

திருப்பத்தூரில் குடிநீர் வழங்காததால் நகராட்சியை கண்டித்து பெண்கள் காலி குடங்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குடிநீர் வரவில்லை

திருப்பத்தூர் டவுன் கிருஷ்ணகிரி மெயின் ரோட்டில் தேசிய நெடுஞ்சாலை பணிக்காக கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக பள்ளம் தோண்டும்போது 14-வது வார்டு தர்மராஜா கோவில் தெருவுக்கு செல்லும் மேட்டூர் கூட்டுக் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு தர்மராஜா கோயில் தெரு பகுதிக்கு குடிநீர் செல்லவில்லை.

இதுகுறித்து அந்தப்பகுதியில் உள்ள பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். அதன் பேரில் திருப்பத்தூர் நகராட்சி சார்பில் குழாயை சரி செய்தனர். ஆனால் குடிநீருடன், கழிவுநீர் கலந்து வந்தது. இதனை தொடர்ந்து மீண்டும் புகார் தெரிவிகப்பட்டது. ஆனால் நகராட்சி சார்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

காலி குடங்களுடன் மறியல்

குடிநீர் குழாயில் மீண்டும் உடைப்பு ஏற்பட்டு தர்மராஜா கோவில் தெரு பகுதிகளில் 8 மற்றும் 9-வது வண்ணார் தெரு பகுதிகளில் கடந்த 2 மாதமாக குடிநீர் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பெண்கள் காலி குடங்களுடன் தர்மராஜா கோவில் தெரு பகுதியில் மறியலில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து நகராட்சி கவுன்சிலர் ராஜேந்திரன் என்கி்ற ராஜா மற்றும் நகராட்சி அதிகாரிகள் உடனடியாக குடிநீர் வழங்க ஏற்பாடு செய்வதாக கூறியதன் பேரில் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story