கியாஸ் விலை உயர்வை கண்டித்து வீடுகள் முன்பு சிலிண்டரை வைத்து பெண்கள் போராட்டம்


கியாஸ் விலை உயர்வை கண்டித்து வீடுகள் முன்பு சிலிண்டரை வைத்து பெண்கள் போராட்டம்
x

கியாஸ் விலை உயர்வை கண்டித்து வீடுகள் முன்பு சிலிண்டரை வைத்து பெண்கள் போராட்டம் நடத்தியதால் சேலத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம்

கியாஸ் விலை உயர்வு

நாடு முழுவதும் வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் சமீபத்தில் உயர்த்தியது. அதாவது, இதுவரை இல்லாத வகையில் புதிய உச்சமாக சிலிண்டர் விலை ரூ.1,086.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதற்கு பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்தநிலையில், வீட்டுஉபயோக கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்தும், மத்திய அரசுக்கு எதிராகவும் சேலத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் நேற்று மாலை நூதன போராட்டம் நடத்தப்பட்டது.

நூதன போராட்டம்

சேலம் திருவாக்கவுண்டனூர் அருகே அம்மாசி தெருவில் வசிக்கும் ஏராளமான பெண்கள் தங்களது வீடுகளில் இருந்து கியாஸ் சிலிண்டர்களை வெளியே எடுத்து வந்தனர். வீட்டுக்கு வெளியே தெருவில் சிலிண்டர்களை வைத்தனர். பின்னர் சிலிண்டரில் கரண்டியால் அடித்து ஓசை எழுப்பி நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்துக்கு மாதர் சங்க நிர்வாகி ஜெயமாலா தலைமை தாங்கினார். இதில் மாவட்ட செயலாளர் ஞானசவுந்தரி உள்பட பலர் கலந்து கொண்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story