தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு மக்கள் சமூக நீதி பேரவையினர் ஆர்ப்பாட்டம்
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டம் மக்கள் சமூக நீதி பேரவை சார்பில், தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர்கள் கண்ணன், சண்முகம் ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட தலைவர் சிவலிங்கம் வரவேற்றார். மாவட்ட அவைத்தலைவர் மாதப்பன் முன்னிலை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் கோவிந்தன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். தர்மபுரி மாவட்டத்தில் 187 கிராமங்களில் குருமன்ஸ் பழங்குடி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி மற்றும் திட்டங்களை முழுமையாக செயல்படுத்த வேண்டும். பழங்குடி மக்களுக்கு மத்திய அரசு அறிவிக்கப்பட்ட நிதியை முழுமையாக ஒதுக்கீடு செய்து பணிகளை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட துணை செயலாளர் சரவணன், பல்வேறு சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் காவேரி, ராஜ்குமார், ரவி, விஜய், சிவலிங்கம், சித்துராஜ், சதீஷ், ஒன்றிய செயலாளர்கள் வினோத், செல்வம், விஜயகுமார், முருகேசன், தேவேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். முடிவில் நல்லம்பள்ளி ஒன்றிய செயலாளர் வீரபத்திரன் நன்றி கூறினார்.