தூய்மையான குடிநீர் வழங்க வேண்டும்
தூய்மையான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகரசபை கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.
ராஜபாளையம்,
தூய்மையான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகரசபை கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.
குடிநீர் வினியோகம்
ராஜபாளையம் நகரசபையின் அவசர கூட்டம் நகர்மன்ற தலைவர் பவித்ரா ஷியாம் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். வரவு செலவு கணக்குகள், நகராட்சிக்கு உட்பட்ட 42 வார்டுகளில் உள்ள சின்டெக்ஸ் தொட்டிகளை சீரமைத்தல், தனியார் டிராக்டர்கள் மூலம் குடிநீர் வினியோகம் செய்தல் உள்ளிட்ட 128 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ெதாடர்ந்து கவுன்சிலர்கள் விவாதம் நடைபெற்றது. அப்போது கவுன்சிலர் ஞானவேல் கூறுகையில், கடந்த 4 நகராட்சி கூட்டங்களிலும் ஆணையர் கலந்து கொள்ளவில்லை. ஆணையர் இடம் காலியாக இருக்கிறதா என கேள்வி எழுப்பினார்.
வாக்குவாதம்
கவுன்சிலர் குமார்:- குடிநீரில் சாக்கடை கழிவுகள் கலந்து வருவதாக தான் அளித்த புகார் மீது நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.
சுகாதாரத்துறை அதிகாரி கூறுகையில், தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் நிறைவேறிய உடன் இந்த பிரச்சினை சரியாகும் என கூறினார். அப்ேபாது அதிகாரிக்கும், கவுன்சிலருக்கும் இடையே சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது.
செந்தில்குமார்:- சாக்கடை கலந்த குடிநீரை குடிக்க முடியுமா என மக்கள் கேள்வி கேட்பதாகவும், நகராட்சிக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்புகளில் இருந்து பாதுகாக்க ரூ.19 லட்சம் செலவில் சுற்றுச்சுவர் கட்டுவதற்காக போடப்பட்ட தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள மறுப்பதாகவும் தெரிவித்தார்.
அப்போது தலைவர் பதில் அளித்து பேசுைகயில், பொதுமக்களுக்கு தூய்மையான குடிநீரை வினியோகம் செய்ய அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதால் நகராட்சி தலைவருக்கும், கவுன்சிலர்களுக்கும் கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளது. சுத்தமில்லாத தண்ணீர் வழங்கப்படுவதை வைத்து அரசியல் செய்யப்படுவதாகவும் வேதனை தெரிவித்தார்.