தூய்மை பணியாளர்களுக்கு பணி வழங்க வேண்டும்
முன்னறிவிப்பு இன்றி நிறுத்தி வைத்த தூய்மை பணியாளர்களுக்கு பணி வழங்க வேண்டும் என்று ஏ.ஐ.டி.யூ.சி. அமைப்பினர் கோரிக்கை விடுத்தனர்.
திண்டுக்கல்
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் பெருமாள் தலைமையில், ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட பொதுச்செயலாளர் ராஜ்குமார் மற்றும் நிர்வாகிகள் நேற்று வந்தனர். மாவட்ட கலெக்டர் ஷஜீவனாவிடம் அவர்கள் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அதில், "ஆண்டிப்பட்டி பேரூராட்சியில் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு சம்பளம் வழங்குவதில் முறைகேடு நடந்துள்ளது. அதுகுறித்து கேட்டதற்காக 2 தூய்மை பணியாளர்களை முன்னறிவிப்பு இன்றி எந்த காரணமும் சொல்லாமல் பணிக்கு அனுப்பாமல் நிறுத்தி வைத்துள்ளனர். எனவே, அவர்களுக்கு பணி வழங்க வேண்டும். மேலும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியிருந்தனர்.
Related Tags :
Next Story