பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கடோக்கன் வினியோகம்
உடன்குடியில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க டோக்கன் வினியோகம் தொடங்கியுள்ளது.
தூத்துக்குடி
உடன்குடி:
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு கரும்பு, பச்சரிசி, சர்க்கரை, ரூ.1,000 ஆகிய பொங்கல் பரிசு தொகுப்பு தமிழக அரசு சார்பில் வழங்கப்பட உள்ளது. இதையொட்டி உடன்குடி பகுதியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ் செயல்படும் ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க டோக்கன் வழங்கும் நிகழ்ச்சி செட்டியா பத்து ஊராட்சியில் நடந்தது. நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்றதலைவர் பாலமுருகன் தலைமை தாங்கினார். தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் அஸ்ஸாப் கல்லாசி டோக்கன் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
Related Tags :
Next Story