வாழை விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்; முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராயணன் வலியுறுத்தல்
வாழை விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராயணன் வலியுறுத்தி உள்ளார்.
இட்டமொழி:
நாங்குநேரி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராயணன், நெல்லை மாவட்ட கலெக்டருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறிஇருப்பதாவது:-
நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட களக்காடு, திருக்குறுங்குடி, மாவடி, மலையடிபுதூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 5 ஆயிரம் ஏக்கருக்கு மேல் விவசாயிகள் வாழை பயிர் செய்துள்ளனர். தற்போது அந்த வாழைகள் இலைக்கருகல் நோயால் பாதிக்கப்பட்டு பல லட்சம் வாழைகள் மிகவும் மோசமாக காணப்படுகிறது. பயிர் செய்யப்பட்டு 7 மாதங்கள் ஆகியுள்ள நிலையில் வாழைகளை பழுப்பு நோய் கடுமையாக தாக்கியதால் மகசூல் கடுமையாக பாதிக்கப்படும் நிலை காணப்படுகிறது. இதனால் கடன்வாங்கி விவசாயம் செய்த விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. எனவே விவசாயிகளை காப்பாற்ற அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.