25 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும்


25 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும்
x

முதல்-அமைச்சர் விழாவில் 25 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர்

முதல்-அமைச்சர் விழாவில் 25 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

ஆய்வு கூட்டம்

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருப்பத்தூர் மாவட்டத்திற்கு வருகை புரிவதையொட்டி முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமையில் நடந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கி.பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் கலெக்டர் கூறியதாவது:-

தமிழக முதல்--அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 21-ந் தேதி திருப்பத்தூர் மாவட்டத்திற்கு வருகை புரிந்து புதிய மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை திறந்து வைக்க உள்ளார். இதனையொட்டி திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, ஆம்பூர், வாணியம்பாடி ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளிலும் பொது மக்களிடமிருந்து 9,036 கோரிக்கை மனுக்கள் வரப்பட்டடுள்ளது. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு 100 சதவிகிதம் தீர்வுக்காணப்பட வேண்டும்.

25 ஆயிரம் பயனாளிகள்

திருப்பத்தூர் டான் போஸ்கோ மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெறவுள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் 25 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுப்பணித்துறை சார்பில் முடிவுற்ற பணிகள், அடிக்கல் நாட்டப்பட உள்ள பணிகளின் விவரங்களை விரைந்து தயார்செய்து வழங்க வேண்டும். வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சித்துறை, மகளிர் திட்டம் உள்ளிட்ட அனைத்து துறைகளின் சார்பில் வழங்கப்படும் பயனாளிகளின் விவரங்களை வருகின்ற 11-ந் தேதிக்குள் தயார்செய்து கொடுக்க வேண்டும்.

100 சதவீதம்

4 சட்டமன்ற தொகுதிகளுக்கும் துணை ஆட்சியர் அளவில் நியமனம் செய்யப்பட்டுள்ள பொறுப்பு அலுவலர்கள் பொது மக்களிடமிருந்து வரபெற்றுள்ள விண்ணப்பங்களின் நடவடிக்கைகளை தினமும் கண்காணிக்க வேண்டும். வரபெற்றுள்ள விண்ணப்பங்கள் மீது நடவடிக்கை எடுத்து 100 சதவீதம் நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செல்வராசு, மகளிர் திட்ட இயக்குநர் உமாமகேஷ்வரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் வில்சன் ராஜசேகர், வருவாய் கோட்டாட்சியர் லட்சுமி, மாவட்ட வழங்கல் அலுவலர் விஜயன், பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் சங்கரலிங்கம் உள்ளிட்ட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story