வருங்கால வைப்பு நிதி குறைதீர்க்கும் கூட்டம்
வருங்கால வைப்பு நிதி குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
விருதுநகர்
சாத்தூர்,
சாத்தூரில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி உதவி மண்டல அலுவலர் உத்தரவின் பேரில் சிவகாசி அலுவலகம் சார்பில் வருங்கால வைப்பு நிதி தொடர்பான குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கோட்டாட்சியர் அனிதா தலைமை வகித்தார். விருதுநகர் மாவட்ட நோடல் அதிகாரி கண்ணதாசன் முன்னிலை வகித்தார். இதில் ஓய்வூதியம் மற்றும் வாரிசு அடிப்படையில் ஓய்வூதியம் உட்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 34 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 19 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது.. இந்த கோரிக்கை மனுக்கள் பதிவு செய்யப்பட்டு முறைப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரி கண்ணதாசன் உறுதி அளித்தார். இதேபோல் ஒவ்வொரு மாதம் 27-ந் தேதி விருதுநகர் மாவட்டத்தில் வருங்கால வைப்பு நிதி தொடர்பான குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும் என அவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story