வருங்கால வைப்புநிதி ஓய்வூதியர்கள் குறைதீர்வு கூட்டம்


வருங்கால வைப்புநிதி ஓய்வூதியர்கள் குறைதீர்வு கூட்டம்
x

வருங்கால வைப்புநிதி ஓய்வூதியர்கள் குறைதீர்வு கூட்டம் வருகிற 10-ந் தேதி நடக்கிறது.

வேலூர்

வருங்கால வைப்புநிதி ஓய்வூதியம் பெறுவோருக்கான குறைதீர்வு கூட்டம் வேலூர் மண்டல வருங்கால வைப்புநிதி கமிஷனர் வி.சதீஷ்குமார் மற்றும் இதர அலுவலர்கள் முன்னிலையில் வருகிற 10-ந் தேதி காலை 11.30 மணி முதல் நடைபெற உள்ளது.

எனவே வருங்கால வைப்புநிதி ஓய்வூதியர்கள் தங்கள் குறைகளை பெயர், வருங்கால வைப்புநிதி எண், ஓய்வூதிய எண் உள்ளிட்ட விவரங்களுடன் எழுதி வருங்கால வைப்புநிதி மண்டல அலுவலகம், எஸ்-4, தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதி-3 சத்துவாச்சாரி, வேலூர்-632009 என்ற முகவரிக்கு நாளைக்குள் (சனிக்கிழமை) கிடைக்கும் வகையில் அனுப்ப வேண்டும். ஓய்வூதியர்கள் https://meet182.webex.com/meet/pr26429714807 என்ற இணையத்திலும் இந்த கூட்டத்தில் பங்கேற்கலாம்.

மேலும் குறைகளை ro.vellore@epfindia.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம் என்று வருங்கால வைப்புநிதி நிறுவன வேலூர் மண்டல கமிஷனர் வி.சதீஷ்குமார் தெரிவித்துள்ளார்.


Next Story