வருங்கால வைப்புநிதி ஓய்வூதியதாரர்கள் குறை தீர்க்கும் கூட்டம்


வருங்கால வைப்புநிதி ஓய்வூதியதாரர்கள் குறை தீர்க்கும் கூட்டம்
x

நெல்லையில் வருங்கால வைப்புநிதி ஓய்வூதியதாரர்கள் குறை தீர்க்கும் கூட்டம் வருகிற 14-ந்தேதி நடக்கிறது

திருநெல்வேலி

நெல்லை தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அலுவலகத்தில் மண்டல ஆணையாளர் சச்சின் டி.ஷெட்டி தலைமையில், வருங்கால வைப்புநிதி ஓய்வூதியதாரர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 14-ந்தேதி (புதன்கிழமை) நடக்கிறது. எனவே நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களைச் சேர்ந்த வருங்கால வைப்புநிதி ஓய்வூதியதாரர்களின் குறைகள் ஏதேனும் நீண்டகாலமாக தீர்க்கப்படாமல் இருப்பின் அவற்றை நிவர்த்தி செய்ய மனு மூலம் 'மண்டல ஆணையாளர், வருங்கால வைப்புநிதி நிறுவனம் என்.ஜி.ஓ. 'பி' காலனி, திருநெல்வேலி' என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

மனுவின் மீது 'வருங்கால வைப்புநிதி ஓய்வூதியதாரர்கள் குறைதீர்க்கும் முகாம்' மற்றும் மனுதாரரின் தொலைபேசி எண் ஆகியவற்றை குறிப்பிட்டு வருகிற 7-ந்தேதிக்குள் (புதன்கிழமை) கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு மனு அனுப்பியவர்கள் வருகிற 14-ந்தேதி (புதன்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும் ஆணையாளரை நேரில் சந்தித்து தங்களது குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். இந்த தகவலை தொழிலாளர் வருங்கால வைப்புநிதி மண்டல ஆணையாளர் சச்சின் டி.ஷெட்டி தெரிவித்துள்ளார்.


Next Story