முதியோர் இல்லத்தில் மதியஉணவு வழங்கல்:மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்தார்
தூத்துக்குடியில் கனிமொழி எம்.பி. பிறந்தநாளை முன்னிட்டு முதியோர் இல்லத்தில் மதியஉணவு வழங்கும் நிகழ்ச்சியை மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடியில் தி.மு.க. துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி பிறந்தநாளை முன்னிட்டு முதியோர் இல்லத்தில் மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சியை மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்தார்.
பிறந்தநாள்
தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும், தி.மு.க. துணை பொதுச் செயலாளருமான கனிமொழி எம்.பி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் ரத்ததானம் முகாம் நடந்தது. இதில் 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர். இதனை தொடர்ந்து தூத்துக்குடி போல்பேட்டையில் உள்ள முதியோர் இல்லத்தில் மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை தாங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
கலந்து கொண்டவர்கள்
நிகழ்ச்சிகளில் தி.மு.க. மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் மற்றும் கட்சிநிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.