பள்ளி மாணவிகளுக்கு இயற்கை நல பெட்டகம் வழங்கல்


பள்ளி மாணவிகளுக்கு இயற்கை நல பெட்டகம் வழங்கல்
x
தினத்தந்தி 26 Dec 2022 12:15 AM IST (Updated: 26 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி எவரெஸ்ட் மாரியப்ப நாடார் பள்ளி மாணவிகளுக்கு இயற்கை நல பெட்டகம் வழங்கப்பட்டது.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி எவரெஸ்ட் மாரியப்ப நாடார் மேல்நிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கு, இயற்கை நல பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை பள்ளி தலைவரும், செயலாளருமான ஆர்.ஏ.அய்யனார் செய்திருந்தார்.

நிகழ்ச்சியில் கோவில்பட்டி அரசு மாவட்ட மருத்துவமனை இயற்கை மற்றும் யோகா டாக்டர் திருமுருகன் கலந்து கொண்டு இயற்கை மருத்துவம் பற்றியும், இயற்கை நலம் பற்றியும் பேசினார். தொடர்ந்து இயற்கை நல பெட்டகங்களை மாணவிகளுக்கு வழங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் வெங்கடேசன் நன்றி கூறினார்.


Next Story