ஆறுமுகநேரியில் முருக பக்தர்களுக்கு குளிர்பானம் வழங்கல்


ஆறுமுகநேரியில் முருக பக்தர்களுக்கு குளிர்பானம் வழங்கல்
x
தினத்தந்தி 2 Jun 2023 12:15 AM IST (Updated: 2 Jun 2023 2:17 PM IST)
t-max-icont-min-icon

ஆறுமுகநேரியில் முருக பக்தர்களுக்கு குளிர்பானம் வழங்கப்பட்டது.

தூத்துக்குடி

ஆறுமுகநேரி:

ஆறுமுகநேரி நகர பஞ்சாயத்து சார்பில் வைகாசி விசாகத்திருவிழாவை முன்னிட்டு திருச்செந்தூர் கோவிலுக்கு பாதயாத்திரை செல்லும் முருகபக்தர்களுக்கு குளிர்பானம் வழங்கப்பட்டது.

மேலும் பக்தர்கள் நடைபாதையில் வெப்பத்தை தணிக்கும் வகையில் டிராக்டர் வாகனம் மூலம் தண்ணீர் தெளிக்கப்பட்டது. பாதயாத்திரை பக்தர்கள் இரவில் நடந்து செல்லும் போது விபத்து ஏற்பாடாத வகையில் அவர்களது முதுகு பகுதியில் ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது.

இதனை ஆறுமுகநேரி நகர பஞ்சாயத்து துணை தலைவர் அ. கல்யாணசுந்தரம் தலைமை வகித்து ஸ்டிக்கர் ஒட்டும் பணியை தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் நகர பஞ்சாயத்து நிர்வாக அதிகாரி கணேசன், சுகாதார மேற்பார்வையாளர் கார்த்திக், வார்டு உறுப்பினர்கள் ஆறுமுகநயினார், ரமா லட்சுமணன் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் இப்பணியினை மேற்கொண்டனர்.

இதேபோல் சாகுபுரம் டி.சி. டபிள்யூ தொழிற்சாலையின் நுழைவு வாயில் முன்பு தொழிற்சாலையின் சார்பில் முருக பக்தர்களுக்கு குளிர்பானம், மோர், ஆகியவை வழங்கப்பட்டது. மேலும் நெடுந்தூரத்தில் இருந்து நடந்து வரும் முருக பக்தர்களின் கால் வலி மற்றும் சிறு பாதிப்புகளுக்கு இலவச மருத்துவ முகாமும் நடத்தினர்.

இந்நிகழ்ச்சியை தொழிற்சாலையின் மூத்த செயல் உதவி தலைவர் ஜி.ஸ்ரீனிவாசன் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் தொழிற்சாலை உதவி தலைவர் சுரேஷ் மற்றும் தொழிற்சாலை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்


Next Story