தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்


தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்
x
தினத்தந்தி 29 Nov 2022 12:15 AM IST (Updated: 29 Nov 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீவைகுண்டத்தில் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பிறந்தநாளை முன்னிட்டு தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

தூத்துக்குடி

ஸ்ரீவைகுண்டம்:

உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சி தலைவர் சினேகவல்லி பாலமுருகன் தலைமை தாங்கினார். அகில இந்திய பார்வர்டு பிளாக் மாநில இளைஞரணி தலைவர் சுரேஷ் தேவர், தி.மு.க. மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பாலமுருகன், மாவட்ட துணைச் செயலாளர் ஆறுமுகப்பெருமாள் ஆகியோர் முன்னிலை வைத்தனர். உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு இளைஞரணி சார்பில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி உமரிசங்கர் தூய்மை பணியாளர்களுக்கு இலவச சேலை மற்றும் மதிய உணவும், மாணவ மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகங்கள் மற்றும் எழுது பொருட்களையும் வழங்கினார்.


Next Story