புதுமைப்பெண் திட்டத்தின்கீழ் 2-ம் கட்டமாகஉயர்கல்வி படிக்கும் 3,222 மாணவிகளுக்கு தலா ரூ.1,000 உதவித்தொகை வழங்க ஏற்பாடுகலெக்டர் பழனி தகவல்


புதுமைப்பெண் திட்டத்தின்கீழ் 2-ம் கட்டமாகஉயர்கல்வி படிக்கும் 3,222 மாணவிகளுக்கு தலா ரூ.1,000 உதவித்தொகை வழங்க ஏற்பாடுகலெக்டர் பழனி தகவல்
x
தினத்தந்தி 8 Feb 2023 12:15 AM IST (Updated: 8 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் மாவட்டத்தில் புதுமைப்பெண் திட்டத்தின்கீழ் 2-ம் கட்டமாக உயர்கல்வி படிக்கும் 3,222 மாணவிகளுக்கு தலா ரூ.1,000 உதவித்தொகை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார்.

விழுப்புரம்


ஆலோசனைக்கூட்டம்

விழுப்புரம் மாவட்டத்தில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் புதுமைப்பெண் திட்டத்தின்கீழ் 2-ம் கட்டமாக அரசு பள்ளியில் பயின்று உயர்கல்வி படிக்கும் முதலாமாண்டு மற்றும் விடுபட்ட மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்க உள்ளதை முன்னிட்டு அதற்காக மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் சி.பழனி தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-

அரசு பள்ளியில் படிக்கும் ஏழை, எளிய மாணவிகளின் கல்வி இடைநிற்றலை தவிர்த்திடும் விதமாக மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டத்தின்கீழ் 'புதுமைப்பெண் திட்டம்" மூலம் உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு முதல்-அமைச்சர் செயல்படுத்தியுள்ளார்.

3,222 மாணவிகளுக்கு உதவித்தொகை

அதனடிப்படையில் விழுப்புரம் மாவட்டத்தில் முதல்கட்டமாக ஆகஸ்டு மாதம் முதல் 56 கல்லூரிகளை சேர்ந்த 2, 3 மற்றும் 4-ம் ஆண்டுகளில் படிக்கும் 4,174 மாணவிகளுக்கு ரூ.2 கோடியே 8 லட்சத்து 70 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. 2-ம் கட்டமாக நடப்பு கல்வியாண்டில் 74 கல்லூரிகளில் படிக்கும் முதலாம் ஆண்டு மற்றும் விடுபட்ட மாணவிகள் 3,222 பேருக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும்பொருட்டு அம்மாணவிகளிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டது. அவர்களின் வங்கிக்கணக்கில் ஊக்கத்தொகை செலுத்தும் வகையில் வங்கிக்கணக்கில் ஆதார் எண் இணைக்கும் பணிகளும் அந்தந்த கல்லூரிகளிலேயே நடத்தப்பட்டது.

2-ம் கட்டமாக தமிழ்நாடு முதல்-அமைச்சரால் இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டு விழுப்புரம் மாவட்டத்தில், தேர்ந்தெடுக்கப்பட்ட 7 கல்லூரிகளை சேர்ந்த 96 மாணவிகளுக்கு வேலைவாய்ப்பு மலர் மற்றும் நிதி உதவி செலுத்தப்பட்ட ஏ.டி.எம். அட்டை வழங்கப்படும். ஏனைய மாணவிகளுக்கு அவர்களது கல்லூரிகளின் மூலம் அவர்களது வீட்டிற்கு தபால் மூலம் அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். இக்கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா, சமூகநல அலுவலர் ராஜம்மாள், முன்னோடி வங்கி மேலாளர் ஹரிஹரசுதன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story