ஆதார் இணைப்புடன் கூடிய வங்கிக்கணக்கு தொடங்க ஏற்பாடு


ஆதார் இணைப்புடன் கூடிய வங்கிக்கணக்கு தொடங்க ஏற்பாடு
x

மகளிர் உரிமைத்தொகை திட்ட பயனாளிகளுக்கு ஆதார் இணைப்புடன் கூடிய வங்கிக்கணக்கு தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வேலூர்

வேலூர் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் நா.முரளி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கலைஞர் மகளிர் உரிமை தொகை பெற தகுதியுள்ள பயனாளிகளுக்கு ஆதார் இணைப்புடன் கூடிய வங்கிக்கணக்கு அவசியம் என்பதால் தகுதியுள்ள பயனாளிகள் அருகில் உள்ள அஞ்சலகங்கள், தபால்காரர், கிராம அஞ்சல் ஊழியரை அணுகி ஆதார் இணைப்புடன் கூடிய இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கிக்கணக்கு தொடங்கி பயன்பெறலாம்.

சில நிமிடங்களில் கணக்கு தொடங்க முடியும். இருப்பு தொகை எதுவும் கிடையாது. இந்த உதவித்தொகையை பயனாளிகள் வீடுகளிலேயே தபால்காரர் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.

இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி அஞ்சல்துறையின் கீழ் இயங்கும் வங்கி என்பதால் மகளிர் உரிமைத்தொகை பெறும் பயனாளிகள் மட்டுமல்லாமல் 100 நாள் வேலைதிட்ட பயனாளிகள், பி.எம்.கிசான் திட்ட பயனாளிகள், முதியோர், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, தொழிலாளர் நல வாரிய உதவித்தொகை பெறும் பயனாளிகளும் வங்கிக்கணக்கு தொடங்கி பயன்பெறலாம். மாவட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சல் நிலையங்களிலும் இதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story