நிலங்கள் தொடர்பான கோரிக்கை மனுக்களை அளிக்க ஏற்பாடு


நிலங்கள் தொடர்பான கோரிக்கை மனுக்களை அளிக்க ஏற்பாடு
x
தினத்தந்தி 10 Jun 2023 12:50 AM IST (Updated: 10 Jun 2023 12:49 PM IST)
t-max-icont-min-icon

நிலங்கள் தொடர்பான கோரிக்கை மனுக்களை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பெரம்பலூர்

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் வீட்டு வசதி திட்டங்களை செயல்படுத்த நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளது தொடர்பாக பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்ததன் தொடர்ச்சியாக, பொதுமக்களின் கோரிக்கைகளை பெற்று தீர்வு காண வேண்டும் என்று முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து தற்போது திருச்சியில் எண் 89, ராஜாராம் சாலை, கே.கே.நகர் என்ற முகவரியில் உள்ள வீட்டு வசதி பிரிவு அலுவலகத்தில் பொதுமக்களின் கோரிக்கைகளை பெறுவதற்கு பெட்டி வைக்கப்பட்டுள்ளது. வீட்டு வசதி வாரியத்தால் வீட்டு வசதி திட்டங்களை செயல்படுத்த நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளது தொடர்பாக பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள் ஏதேனும் கருத்து, கோரிக்கைகளை தெரிவிக்க விரும்பினால், அலுவலக வேலை நாட்களில் இந்த பெட்டியில் தங்கள் மனுக்களை வருகிற 30-ந்தேதி வரை அளிக்கலாம். கோரிக்கை மனுக்களின் மீது உரிய தீர்வு காணப்பட்டு விளக்கம் அளிக்கப்படும் என்று வீட்டு வசதி வாரியத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் முதல்-அமைச்சரின் முன்னெடுப்பு திட்டம் மூலம் மனு செய்து பயன்பெறலாம், என்று கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.


Next Story