திருவேங்கடம் சாலையில் தற்காலிக பஸ்நிலையம் அமைப்பு
திருவேங்கடம் சாலையில் தற்காலிக பஸ்நிலையம் செயல்பட தொடங்கியது
தென்காசி
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவிலில் பஸ்நிலையத்தை விரிவாக்கம் செய்து அதில் புதிய பஸ்நிலையம் கட்டும் பணிகள் தொடங்க இருக்கிறது. இதற்காக நேற்று சங்கரன்கோவிலில் செயல்பட்டு வந்த பஸ்நிலையம் மூடப்பட்டது. தொடர்ந்து திருவேங்கடம் சாலையில் கிழக்கு பகுதியில் நகராட்சி சார்பில் தற்காலிக பஸ்நிலையம் அமைக்கப்பட்டு அது செயல்படுத்தப்பட்டு வருகின்றது. தற்காலிக பஸ்நிலையத்தில் கழிப்பிட வசதி, குடிநீர் வசதிகள் அனைத்தும் நகராட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே பஸ்நிலைய விரிவாக்க பணி முடியும் வரை தற்காலிக பஸ்நிலையம் செயல்படும் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story