மாணவ-மாணவிகளுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்


மாணவ-மாணவிகளுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்
x

மாணவ-மாணவிகளுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது.

பெரம்பலூர்

தமிழகத்தில் 2021-22-ம் கல்வி ஆண்டில் 10, 12-ம் வகுப்புகளில் அரசு பொதுத்தேர்வு எழுதிய மாணவ-மாணவிகளுக்கு கடந்த 20-ந்தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. அதனை தொடர்ந்து அவர்கள் மேல்நிலை, உயர்கல்வி சேருவதற்கு மதிப்பெண் சான்றிதழ் தேவைப்படும் என்பதால், அவர்களுக்கு ஜூன் 24-ந்தேதி முதல் (அதாவது நேற்று) அவர்கள் பயின்ற பள்ளிகளிலேயே தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என்று அரசு அறிவித்திருந்தது. அதன்படி நேற்று முதல் பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் 10, 12-ம் வகுப்பு முடித்த மாணவ-மாணவிகளுக்கு, அவர்கள் பயின்ற பள்ளிகளில் தலைமை ஆசிரியர்களால் பள்ளி மாற்று சான்றிதழுடன், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் கணினி மையங்களிலும் இணைய வழியில் மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்து மாணவ, மாணவிகள் பெற்றுக்கொண்டனர்.

மேலும் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) பிளஸ்-1 வகுப்புக்கு பள்ளிகள் திறக்கப்படவுள்ளதால், தற்போது பள்ளிகளில் பிளஸ்-1 வகுப்புக்கு மாணவர் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும், பொறியியல் கல்லூரிகளிலும் முதலாமாண்டு மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.


Next Story