திருமண ஏக்கத்தில் பி.எஸ்.என்.எல். ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை


திருமண ஏக்கத்தில் பி.எஸ்.என்.எல். ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 31 May 2023 12:15 AM IST (Updated: 31 May 2023 12:37 PM IST)
t-max-icont-min-icon

மார்த்தாண்டம் அருகே திருமணம் செய்து வைக்காத ஏக்கத்தில் பி.எஸ்.என்.எல். ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கன்னியாகுமரி

குழித்துறை:

மார்த்தாண்டம் அருகே திருமணம் செய்து வைக்காத ஏக்கத்தில் பி.எஸ்.என்.எல். ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பி.எஸ்.என்.எல். ஊழியர்

புதுக்கோட்டை மாவட்டம் ராஜகோபாலபுரம் பகுதியை சேர்ந்தவர் ரவி (வயது 43). இவர் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இதற்காக மார்த்தாண்டம் அருகே உள்ள சாங்கையில் மனைவி மற்றும் குழந்தையுடன் தங்கியுள்ளார். இவர்களுடன் மனைவியின் தம்பி சரவணகுமாரும் (19) தங்கியிருந்து பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் ஒப்பந்த ஊழியராக வேலை செய்து வந்தார்.

சரவணகுமார் தனக்கு திருமணம் ெசய்து வைக்குமாறு உறவினர்களிடம் கூறி வந்தார். அவர்கள் செய்து வைக்கிறோம் என அவரை தேற்றி வந்தனர். இந்தநிலையில் தனக்கு இன்னும் திருமணம் செய்து வைக்கவில்லையே என்ற ஏக்கத்தில் கடந்த சில நாட்களாக சரவணகுமார் மனமுடைந்த நிலையில் காணப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

தூக்குப்போட்டு தற்கொலை

சம்பவத்தன்று இரவு வழக்கம்போல் சரவணகுமார் சாப்பிட்டுவிட்டு தூங்கச் சென்றார். மறுநாள் காலையில் பார்த்தபோது, அவர் வீட்டின் முன்பு நின்ற ஒரு மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.

இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனே அவரை மீட்டு குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், சரவணகுமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் இன்ஸ்பெக்டர் இளவரசு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

திருமணம் செய்து வைக்காத ஏக்கத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story