எம்.பி. பதவி வழங்கியது மகிழ்ச்சி அளிக்கிறது: 'விளையாட்டு துறையை மேம்படுத்த மாநிலங்களவையில் குரல் கொடுப்பேன்'-சேலத்தில் பி.டி.உஷா பேட்டி


எம்.பி. பதவி வழங்கியது மகிழ்ச்சி அளிக்கிறது: விளையாட்டு துறையை மேம்படுத்த மாநிலங்களவையில் குரல் கொடுப்பேன்-சேலத்தில் பி.டி.உஷா பேட்டி
x

‘விளையாட்டு துறையை மேம்படுத்த மாநிலங்களவையில் குரல் கொடுப்பேன்’ என்று சேலத்தில் தடகள வீராங்கனை பி.டி.உஷா கூறினார்.

சேலம்

பேட்டி

சேலம் விநாயகா மிஷன்ஸ் கல்வி நிறுவனத்தலைவர் ஏ.சண்முகசுந்தரம் பிறந்தநாளையொட்டி, சேலம் விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவன நிகர் நிலைப்பல்கலைக்கழகம் சார்பில் மாவட்ட அளவிலான 7 கிலோ மீட்டர் தூரம் மாரத்தான் போட்டி நேற்று நடைபெற்றது.

சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் தொடங்கிய இந்த போட்டியை தேசிய தடகள வீராங்கனை பி.டி.உஷா கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதன் பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கவுரவம்

நான் கடந்த 1977-ம் ஆண்டில் இருந்து ஓட்டப்பந்தய போட்டிகளில் கலந்து கொண்டு வருகிறேன். ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொள்வதும், கடுமையான உடற்பயிற்சியும் உடலுக்கு ஆரோக்கியம் தரும். எனக்கு எம்.பி. பதவி கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. தற்போது மாநிலங்களவை எம்.பி. பதவி கிடைத்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

என்னை எம்.பி.யாக நியமனம் செய்தது, விளையாட்டு துறைக்கு கிடைத்த கவுரவமாக கருதுகிறேன். குறிப்பாக தடகள வீரர், வீராங்கனைகளுக்கு கிடைத்த அங்கீகாரம் இது. மாநிலங்களவையில் எனக்கு பேச வாய்ப்பு அளிக்கும் போது, விளையாட்டு துறையை மேம்படுத்த குரல் கொடுப்பேன். தேவையான கோரிக்கைகளை முன்வைப்பேன்.

அதிக பதக்கம் பெற வாய்ப்பு

ஒலிம்பிக் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் கலந்து கொள்பவர்களை பிரதமர் மோடி நேரில் அழைத்து பேசி அவர்களுக்கு ஊக்கம் அளிக்கிறார். அதே போன்று வெற்றி பெற்ற பிறகு நாடு திரும்பும் வீரர், வீராங்கனைகளையும் அழைத்து பாராட்டி பரிசு வழங்குவது மேலும் அவர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்துகிறது. கிராமப்புறங்களில் விளையாட்டுக்களுக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளிக்கிறது. இதன் மூலம் வருங்காலத்தில் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா அதிக பதக்கம் பெற வாய்ப்பு உள்ளது.

நீரஜ்சோப்ரா போன்ற இந்திய வீரர்கள் பலர் விளையாட்டில் சாதனை படைப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. தற்போது விளையாட்டு துறைக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது. பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை விளையாட்டு துறையில் சாதனை படைக்க ஊக்கம் அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story