ஆருத்ரா நிதி நிறுவன ஏஜெண்டுகளிடம் பொதுமக்கள் வாக்குவாதம்
ஆருத்ரா நிதி நிறுவன ஏஜெண்டுகளிடம் பொதுமக்கள் வாக்குவாதம் செய்தனர்.
நெமிலி
ஆருத்ரா நிதி நிறுவன ஏஜெண்டுகளிடம் பொதுமக்கள் வாக்குவாதம் செய்தனர்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களிடம் அதிக வட்டி தருவதாக கூறிய ஆருத்ரா நிதி நிறுவனத்தில் ஏராளமானோர் பணம் டெபாசிட் செய்தனர். அந்த நிறுவனம் மோசடியில் ஈடுபட்டு பணத்தை திருப்பி தரவில்லை என புகார்கள் வந்ததால் ஆருத்ரா நிதி நிறுவனம் மீது சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த நிலையில் நெமிலியை அடுத்த சயனபுரம் கிராமத்தை சேர்ந்த யோகானந்தம் மற்றும் சதீஷ் ஆகியோர் நிறுவனத்தின் ஏஜெண்டுகளாக செயல்பட்டு பொது மக்களிடம் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் திரட்டி வழங்கி உள்ளனர். இவர்கள் பொருளாதார குற்றப்பிரிவு வழக்கில் ஜாமீன் பெற்றுள்ள நிலையில், ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டி முதலீட்டாளர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று ஆவணங்களை பெற முயற்சித்தனர். அப்போது, நிதி நிறுவனத்தால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் யோகானந்தம் மற்றும் சதீஷ் ஆகியோரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
நிதி நிறுவன மோசடி குறித்து பொருளாதார குற்றப்பிரிவு வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வரும் நிலையில் பாதிக்கப்பட்ட நபர்களின் விவரங்களை முழுமையாக நீதிமன்றத்தில் சமர்ப்பித்தால் மட்டுமே இப்பிரச்சனைக்கு தீர்வு காண முடியும் என தெரிவிக்கப்பட்டது.