மின்சார பாதுகாப்பு குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு
மின்சார பாதுகாப்பு குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
வேலூர்
தமிழ்நாடு மின்சார வாரிய பேரணாம்பட்டு உப கோட்டம் சார்பில் மழை காலங்களில் இடி, மின்னல் ஏற்படும் போது மின்சார பாதுகாப்பு குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருப்பது குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி பேரணாம்பட்டு நகரம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் நடந்தது. பேரணாம்பட்டு உதவி செயற்பொறியாளர் பெருமாள் தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியில் உதவி பொறியாளர்கள் ரகுநந்தன், சுரேஷ் மற்றும் மின்வாரிய களப்பணியாளர்கள் கலந்து கொண்டு பொது மக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கி விளக்கி கூறினர்.
Related Tags :
Next Story