ரேஷன் கடைகளில் பாமாயில் தட்டுப்பாடு பொதுமக்கள் குற்றச்சாட்டு


ரேஷன் கடைகளில் பாமாயில் தட்டுப்பாடு பொதுமக்கள் குற்றச்சாட்டு
x

ரேஷன்கடைகளில் பாமாயிலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

வேலூர்

வேலூர்

ரேஷன்கடைகளில் பாமாயிலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

பொது வினியோக திட்டத்தின் கீழ் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பாமாயில் வழங்கப்பட்டு வருகிறது. வேலூர் மாவட்டத்தில் உள்ள 708 ரேஷன் கடைகள் மூலம் 4 லட்சத்து 50 ஆயிரத்து 709 அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் வேலூர் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் பாமாயில் முறையாக வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. பாமாயில் தட்டுப்பாடு நிலவுவதாக அதிகாரிகள் தெரிவிப்பதாக மக்கள் கூறுகின்றனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், பாமாயில் இருப்பு குறைவாக உள்ளது. அதற்கேற்ப வினியோகிக்கப்பட்டு வருகிறது. ஓரிரு நாட்களில் அதிகப்படியான பாமாயில் வரப்பெறும். இதையடுத்து அனைத்து கடைகளுக்கும் தட்டுப்பாடு இன்றி வினியோகிக்கப்படும் என்றனர்.


Next Story