பொதுமக்கள் சாலைமறியல்
ராஜபாளையம் அருகே பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர்
ராஜபாளையம்,
ராஜபாளையம் அருகே புத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட இனாம் கோவில்பட்டி இந்திரா காலனி பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கொட்டப்படும் கோழி கழிவுகளால் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர். இதையடுத்து கோழி கழிவுகள் கொட்டுபவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், சுகாதார சீர்கேடு விளைவிக்கும் வகையில் இங்கு எந்தஒரு செயலும் செய்ய அனுமதிக்கக்கூடாது என அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த தளவாய்புரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர் பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story