மகளிர் போலீஸ் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகை


மகளிர் போலீஸ் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகை
x

பர்கூரில் சிறுமியை கடத்திய வாலிபரை கைது செய்யக்கோரி பொதுமக்கள் மகளிர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி

பர்கூர்

பர்கூரில் சிறுமியை கடத்திய வாலிபரை கைது செய்யக்கோரி பொதுமக்கள் மகளிர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சிறுமி கடத்தல்

பர்கூர் பகுதியை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இந்த சிறுமி அரசு பள்ளி ஒன்றில் 10-ம் வகுப்பு படித்து வந்தாள். இதனிடையே நேற்று அதிகாலை வீட்டில் இருந்து சிறுமி திடீரென மாயமானாள். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் பர்கூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

அப்போது பர்கூர் அடுத்த தபால்மேடு இந்திரா நகரை சேர்ந்த சரக்கு வேன் டிரைவர் பிரேம்குமார் (வயது22) என்பவர் சிறுமியை கடத்திசென்றது ெதரியவந்தது. போலீசார் தன்னை தேடுவதை அறிந்த பிரேம்குமார் நேற்று சிறுமியை பர்கூர் பஸ் நிலையத்தில் விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று சிறுமியை மீட்டு விசாரணை நடத்தினர்.

சாலை மறியல்

இதுகுறித்து தகவல் அறிந்ததும் சிறுமியின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் போலீஸ் நிலையத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் பிரேம்குமாரை கைது செய்யக்கோரி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். தொடர்ந்து அவர்கள் போலீஸ் நிலையம் முன்பு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து போலீசார் வாலிபரை கைது செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர். தொடர்ந்து போலீசார் சிறுமியை பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இந்த சாலை மறியல் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story