சார் பதிவாளர் அலுவலத்தை பொதுமக்கள் முற்றுகை
பத்திரப்பதிவுக்கு தாமதம் செய்வதாக கூறி சார் பதிவாளர் அலுவலத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வாணியம்பாடி
பத்திரப்பதிவுக்கு தாமதம் செய்வதாக கூறி சார் பதிவாளர் அலுவலத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வாணியம்பாடியில் சார் பதிவாளர் அலுவலகம் உள்ளது. இங்கு கடந்த ஓரிரு தினங்களாக பத்திரப்பதிவு செய்தவர்களுக்கு பதிவு செய்யப்பட்ட பத்திரங்கள் உரிய நேரத்தில் வழங்குவதில்லை, எனவும்,பத்திரங்களை பதிவு செய்வதில் மிகவும் கால தாமதப்படுத்துவதாகவும் அலுவலகத்துக்கு வருவோர் புகார் தெரிவிக்கின்றனர். இதனால் பொதுமக்கள், ரியல் எஸ்டேட் அதிபர்கள் பாதிக்கப்படுவதாகவும் இடைத்தரகர்கள் பலன் அடையும் நிலை ஏற்பட்டு வருகிறது.இந்த நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் தரப்பினருடன் பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களிடம் புதிய சார்பதிவாளராக பொறுப்பேற்று பணியாற்றி வரும் யஹியாகான், பத்திரப்பதிவுக்கு இனி கால தாமதம் ஏற்படாதவாறு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்ததின் பேரில் போராட்டம் கைவிடப்பட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.==========