வாரந்தோறும் திங்கட்கிழமை கோட்ட, தாலுகா அலுவலகங்களிலும் பொதுமக்கள் மனுக்கள் அளிக்கலாம் கலெக்டர் அறிவிப்பு
வாரந்தோறும் திங்கட்கிழமை கோட்ட, தாலுகா அலுவலகங்களிலும் பொதுமக்கள் மனுக்கள் அளிக்கலாம் என கலெக்டர் பாலசுப்பிரமணியம் தொிவித்துள்ளாா்.
கடலூர்
கடலூர் மாவட்டத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை கலெக்டர் தலைமையில் நடைபெறும் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்துக்கு, மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வெகுதூரம் பயணம் செய்து பொதுமக்கள் வந்து தங்களது கோரிக்கை மனுக்களை அளிக்கின்றனர். திங்கட்கிழமை தோறும் கடலூர் மாவட்டத்தில் உள்ள 3 கோட்ட அலுவலகங்கள் மற்றும் 10 தாலுகா அலுவலகங்களில் சம்பந்தப்பட்ட உதவி கலெக்டர் அல்லது வருவாய் கோட்டாட்சியர்கள் மற்றும் தாசில்தார்கள் பொதுமக்களிடம் இருந்து தங்களது அலுவலகங்களிலேயே கோரிக்கை மனுக்களை பெற உள்ளனர். ஆகவே பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை சம்மபந்தப்பட்ட கோட்ட அலுவலகங்கள் மற்றும் தாலுகா அலுவலகங்களில் அளித்து உரிய தீர்வு பெற்று பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story