விபத்துகளை தடுக்க பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம்


விபத்துகளை தடுக்க பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம்
x

திருப்பத்தூர் மாவட்டத்தில் விபத்துகளை தடுக்க பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் என போலீஸ்சூப்பிரண்டு தெரிவித்தார்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் காவல்துறை சார்பில் விபத்துகளை தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருப்பினும் தேசிய நெடுஞ்சாலைகளில் தொடர்ந்து விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நெக்குந்தி என்ற இடத்தில் வங்கி துணை மேலாளர் உள்பட இரண்டு பேர் பலியானார்கள். விபத்து நடந்த இடத்திற்கு நேரில் சென்ற மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் விபத்திற்கான காரணம் குறித்தும், விபத்து எவ்வாறு நிகழ்ந்தது என்பது குறித்தும், அப்பகுதி பொதுமக்களிடமும், தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கேட்டு அறிந்தார்.

மேலும் விபத்து ஏற்படாமல் இருக்க பொதுமக்கள், இளைஞர்கள் தங்களது கருத்துகளை தெரிவிக்க முன் வரவேண்டும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆய்வின் போது தேசிய நெடுஞ்சாலை மேலாளர் மற்றும் வாணியம்பாடி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனி ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story