கிராம நிர்வாக அலுவலகங்களில் பொதுமக்கள் மனு கொடுக்கலாம்


கிராம நிர்வாக அலுவலகங்களில் பொதுமக்கள் மனு கொடுக்கலாம்
x

தென்காசி மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலகங்களில் பொதுமக்கள் மனு கொடுக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

தென்காசி

தென்காசி மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த மாதம் (செப்டம்பர்) தென்காசிக்கு வருகிறார். அப்போது, அவர் பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

எனவே தென்காசி மாவட்ட பொதுமக்கள் தங்களுக்கு தேவை உள்ள கோரிக்கைகளை மனுக்களாக தயார் செய்து அவரவர் பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்தில் 26-ந் தேதி (வெள்ளிக்கிழமை) கொடுக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story