மருத்துவமனைக்கு வரும் பொதுமக்கள் முகக்கவசம் அணிய அறிவுறுத்தல்


மருத்துவமனைக்கு வரும் பொதுமக்கள் முகக்கவசம் அணிய அறிவுறுத்தல்
x

கொரோனா பரவலை தடுக்க மருத்துவமனைக்கு வரும் பொதுமக்கள் முகக்கவசம் அணிய அறிவுறுத்தப்படுகிறது.

வேலூர்

கொரோனா பரவலை தடுக்க மருத்துவமனைக்கு வரும் பொதுமக்கள் முகக்கவசம் அணிய அறிவுறுத்தப்படுகிறது.

கொரோனா பரவல்

தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது. எனவே தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி மருத்துவமனைகளில் முகக்கவசம் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.

அரசு மருத்துவமனைகள், சுகாதார நிலையங்களில் பணிபுரியும் டாக்டர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மருத்துவமனைக்கு பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து வரவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி வேலூர் மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் டாக்டர்கள் உள்பட அனைவரும் முகக்கவசம் அணிந்து பணியாற்றினர். மருத்துவமனைக்கு வந்த நோயாளிகள் பலர் முகக்கவசம் அணியாமல் வந்தனர். அவர்கள் முகக்கவசம் அணிந்து வர அறிவுறுத்தப்பட்டது. பின்னர் அவர்கள் முகக்கவசம் அணிந்து வந்தனர்.

பரிசோதனை

சமீபத்தில் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த கல்லூரி மாணவிக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது. அந்த மாணவி சென்னையில் சிகிச்சை பெற்று வருகிறார். கொரோனா பரவலை தடுக்கும் வகையில் அனைத்து மருத்துவமனைகளில் சளி, காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டவர்கள், வெளியூர்களுக்கு சென்று வந்து காய்ச்சல் ஏற்பட்டவர்கள் என அறிகுறி தென்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story