திருப்பூண்டி சார்பதிவகத்தில் சேர்ப்பது தொடர்பான மக்கள் கருத்து கேட்பு கூட்டம்
தலைஞாயிறில் உள்ள கிராமங்களை திருப்பூண்டி சார்பதிவகத்தில் சேர்ப்பது தொடர்பான மக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது.
வேதாரண்யம்:
தலைஞாயிறு 1-ம் சேத்தி முதல் 5-ம் சேத்தி வரை மற்றும் தலைஞாயிறு அக்ரஹாரம் கிராமங்கள் ஆகிய 13 கிராமங்கள் தகட்டூர் ஆகிய கிராமங்களை திருப்பூண்டி சார்பதிவகத்தில் சேர்ப்பது குறித்து மக்கள் கருத்து கேட்பு கூட்டம் வேதாரண்யம் தாசில்தார் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு கோட்டாட்சியர் துரைமுருகன் தலைமை தாங்கினார். ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ. தாசில்தார் ரவிச்சந்திரன், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், வேதாரண்யம் நகர்மன்றத் தலைவர் புகழேந்தி, தலைஞாயிறு பேரூராட்சி மன்ற தலைவர் செந்தமிழ்செல்வி பிச்சையன், தலைஞாயிறு தி.மு.க. ஒன்றிய செயலாளர் மகாகுமார். நாகை மாவட்ட பதிவாளர் ஜனார்த்தனன், வேதாரண்யம் சார்பதிவாளர் கீதா உள்பட பலர் கலந்து கெண்டனர். கூட்டத்தில் தற்போது பயன்பாட்டில் உள்ள திருப்பூண்டி சார்பதிவாளர் அலுவலகத்தில் இயங்க வேண்டும் எனவும் புதிதாக தலைஞாயிறில் இயங்கி வந்து 19 ஆண்டுகளுக்கு முன்பு முடப்பட்ட சார்பதிவாளர் அலுவலகத்தை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.