ரூ.10 லட்சத்தில் கண்காணிப்பு கேமரா அமைக்க பொதுமக்கள் பங்களிப்பு
தக்கோலத்தில் குற்ற சம்பவங்களை தடுக்க கண்காணிப்பு கேமரா அமைக்க பொதுமக்கள் பங்களிப்பாக ரூ.3¼ லட்சம் வழங்கப்பட்டது.
ராணிப்பேட்டை
தக்கோலம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் ரூ.10 லட்சம் மதிப்பில் கண்காணிப்பு கேமராக்கள் அமைப்பதற்காக பேரூராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதன்படி நமக்கு நாமே திட்டத்தின் கீழ் இதனை செயல்படுத்துவதற்காக பொதுமக்கள் பங்களிப்பாக 3-ல் ஒரு பங்கான ரூ.3 லட்சத்து 31 ஆயிரத்திற்கான வரைவோலையை தக்கோலம் செயல் அலுவலர் மாதேஸ்வரனிடம் பேரூராட்சி தலைவர் நாகராஜன் வழங்கினார்.
அப்போது பேரூராட்சி துணைத்தலைவர் கோமளா ஜெயகாந்தன், வார்டு உறுப்பினர்கள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story