பொதுமக்கள் கோரிக்கை


பொதுமக்கள் கோரிக்கை
x

தஞ்சை பூக்கார தெருவில் இருந்து செல்லும் விளார் சாலை பகுதிகளில் குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தஞ்சாவூர்

தஞ்சை பூக்கார தெருவில் இருந்து செல்லும் விளார் சாலை பகுதிகளில் குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குப்பைகள் தேக்கம்

தஞ்சை பூக்கார தெருவில் இருந்து செல்லும் விளார் சாலையானது ஏராளமாக கடைகள், காய்கறி மார்கெட், திருமண மகால் மற்றும் கோவில்கள் நிறைந்த ஒரு பகுதியாகும். இந்த பகுதியை சேர்ந்த மக்கள் நாள்தோறும் தங்களது அன்றாட தேவைகளுக்காக பெரும்பாலும் இந்த சாலையில் பயணிப்பதயே வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த நிலையில் விளார் ரோடு சாலையில் உள்ள அநேக இடங்களில் ஆங்காங்கே குப்பைகள் தேக்கம் அடைந்து இருப்பது சுற்றுச்சூழலை பாதிக்கும் நிலை உள்ளது.

இந்த பகுதிகளில் நாளுக்கு நாள் குப்பைகள் கொட்டப்படுவது அதிகரித்து வருகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. அதுமட்டுமின்றி ஒரு சிலர் குப்பைகளை தீயிட்டு எரித்து செல்கின்றனர். இதனால் வெளியேறும் நச்சுபுகையினால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர். மழைக்காலங்களில் இங்குள்ள பகுதிகளில் உள்ள குப்பைகளில் மழைநீர் தேங்கி டெங்கு, மலேரியா உள்ளிட்ட எண்ணற்ற நோய்களை பரப்ப வழிவகை செய்கின்றது.

அடிக்கடி விபத்து

இந்த பகுதியில் குவிந்து கிடக்கும் குப்பைகளில் இறைச்சி கழிவுகள், மது பாட்டில்கள், பிளாஸ்டிக் பொருட்கள், காய்கறி கழிவுகள் போன்றவை நிறைந்து காணப்படுகிறது. இதனால் ஆடு, மாடு, கோழி, பன்றி போன்ற கால்நடைகள் சாலைகளில் இருக்கும் குப்பைகளை சாலையின் நடுவே இழுத்து போட்டு விடுவதாலும், கால்நடைகள் சாலையில் குறுக்கே அங்குமிங்குமாக ஒடுவதாலும் அந்த வழியாக வரும் வாகன ஒட்டிகள் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றனர்.

இதன் காரணமாக விளார் சாலை பகுதியில் குப்பைகள் அதிகளவில் குவிந்து குப்பை மேடு போல் காட்சியளிக்கிறது. குவிந்து கிடக்கும் குப்பைகளால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் இந்த சாலை வழியாக கோவிலுக்கு வரும் பக்தர்கள், வாகன ஓட்டிகள் மூக்கை மூடியபடி செல்கின்றனர். இந்த பகுதியில் தேங்கி கிடக்கும் பிளாஸ்டிக் குப்பைகளை ஆடு, மாடுகள் தின்று பல்வேறு இடர்பாடுகளுக்கு ஆளாகின்றன.

குப்பைத்தொட்டி வைக்க வேண்டும்

இது குறித்து பொதுமக்கள் கூறும் போது, சாலையோரம் கொட்டப்படும் குப்பைகளை யாரும் அள்ளி செல்வது கிடையாது. இது குறித்து யாரிடம் புகார் தெரிவிப்பது என்று தெரியவில்லை. தேங்கி கிடக்கும் குப்பைகளினால் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இதனால் பள்ளி செல்லும் மாணவ மாணவிகளுக்கு நோய் ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே பொதுமக்கள் நலன்கருதி குப்பைகளை அள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலையோரம் ஆங்காங்கே உரிய முறையில் குப்பை தொட்டிகள் வைக்க வேண்டும். மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து வாங்கும் பணிகளை துரிதப்படுத்த வேண்டும். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விளார் சாலை பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு குப்பைகளை அள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


Next Story