அசுத்தமாக காட்சி அளிக்கும் நீலாயதாட்சி அம்மன் கோவில் குளம்- பக்தர்கள் வேதனை


அசுத்தமாக காட்சி அளிக்கும் நீலாயதாட்சி அம்மன் கோவில் குளம்- பக்தர்கள் வேதனை
x

நாகை நீலாயதாட்சி அம்மன் கோவில் குளம் அசுத்தமாக காட்சி அளிப்பதால் பக்தர்கள் வேதனையில் உள்ளனர்.

நாகப்பட்டினம்

நாகை நீலாயதாட்சி அம்மன் கோவில் குளம் அசுத்தமாக காட்சி அளிப்பதால் பக்தர்கள் வேதனையில் உள்ளனர்.

நீலாயதாட்சி அம்மன் கோவில்

சோழ மன்னர்களின் தலைநகரங்களுள் ஒன்றாக விளங்கிய தலம் நாகை. இங்கு நீலாயதாட்சி அம்மன் சமேத காயாரோகணேஸ்வரர் கோவில் உள்ளது. தியாகராஜர் அருள்பாலிக்கும் சப்தவிடங்க தலங்களில் இக்கோவிலும் ஒன்று.

மதுரை மீனாட்சி அம்மன், காஞ்சி காமாட்சி அம்மன், காசி விசாலாட்சி அம்மன் ஆகிய கோவில்களை போல நாகையில் நீலாயதாட்சி அம்மன் கோவில் அமைந்துள்ளது. மூலவர் காயாரோகணேஸ்வரர் ஆதிபுராணர் என்றும், அம்மன் நீலாயதாட்சி கருந்தடங்கண்ணி என்றும் அழைக்கப்படுகின்றனர். இங்கு அருள்பாலிக்கும் தியாகராஜர் சுந்தரவிடங்கர் என அழைக்கப்படுகிறார்.

அசுத்தமாக காட்சி அளிக்கும் குளம்

நாகை நீலாயதாட்சியம்மன் கோவிலுக்கு சொந்தமான குளம் புண்டரீக குளம் எனப்படுகிறது. இந்த குளத்தை அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குளிப்பதற்கும், இதர தேவைகளுக்கும் பயன்படுத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் மதுப்பிரியர்கள் மது குடித்துவிட்டு பாட்டிலை குளத்தில் வீசி விடுகின்றனர். அங்கு மதுபாட்டில்கள் உடைந்து கிடக்கின்றன. மேலும் சிலர் குப்பைகளையும் குளத்தில் கொட்டுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதனால் புனிதமான கோவில் குளம் அசுத்தமாக காட்சி அளிப்பது, பக்தர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தி உள்ளது. எனவே குளத்தை சுத்தமாக பராமரிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கிறார்கள்.


Next Story