அடிக்கடி நடக்கும் விபத்துகள்; வேகத்தடைகள் அமைக்கப்படுமா? - பொதுமக்கள்


அடிக்கடி நடக்கும் விபத்துகள்; வேகத்தடைகள் அமைக்கப்படுமா? - பொதுமக்கள்
x
தினத்தந்தி 11 Dec 2022 12:45 AM IST (Updated: 11 Dec 2022 12:46 AM IST)
t-max-icont-min-icon

திருத்துறைப்பூண்டி அருகே அடிக்கடி விபத்துகள் நடப்பதை தவிர்க்க விளக்குடி பாலம் பகுதியில் வேகத்தடைகள் அமைக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

திருவாரூர்

திருத்துறைப்பூண்டி அருகே அடிக்கடி விபத்துகள் நடப்பதை தவிர்க்க விளக்குடி பாலம் பகுதியில் வேகத்தடைகள் அமைக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

முள்ளியாற்று பாலம்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள மேட்டுப்பாளையம் ஊராட்சி பகுதிகளையும், விளக்குடி ஊராட்சி பகுதிகளையும் இணைக்கும் வகையில் முள்ளியாற்றில் பாலம் கட்டப்பட்டுள்ளது. திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி உள்ளிட்ட ஊர்களில் இருந்து வரும் வாகனங்கள், மன்னார்குடி, தஞ்சை, திருச்சி செல்ல வேண்டுமானால் இந்த பாலத்தின் வழியாகத்தான் செல்ல வேண்டும்.

குறிப்பாக வேதாரண்யத்தில் இருந்து உப்பு, காய்கறிகள், பூ போன்ற பொருட்களை ஏற்றி வரும் கனரக வாகனங்களும் இந்த பாலத்தின் வழியாகத்தான் செல்ல வேண்டும். பல்வேறு ஊர்களில் இருந்து வேளாங்கண்ணி, நாகூருக்கு சுற்றுலா வருபவர்களும் இந்த பாலத்தை பயன்படுத்தி வருகிறார்கள்.

தவிர்க்க வேண்டும்

விளக்குடி பகுதியில் உள்ள இந்த பாலத்தின் அருகில் மேலத்தெரு, வடக்கு தெரு, திருநகர், விளக்குடி மெயின் ரோடு, ஆற்றங்கரை தெரு, உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் இந்த பாலத்துக்கு வாகனங்கள் வந்து செல்கின்றன.

இதன் காரணமாக பாலம் அமைந்துள்ள பகுதியில் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. இரவு நேரங்களில் இரு சக்கர வாகன விபத்துக்கள் அதிகமாக நடக்கிறது. ஆகையால் பாலம் பகுதியில் ்இருபுறமும் வேகத்தடைகள் அமைத்து விபத்துக்களை தவிர்க்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வேகமாக செல்லும் வாகனங்கள்

இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பிரகாஷ் கூறியதாவது:-

பல்வேறு இடங்களில் இருந்தும் இந்த பாலத்துக்கு வாகனங்கள் வருகின்றன. இரவு நேரத்தில் இந்த பாலத்தை கடக்கும் வாகனங்கள் வேகமாக செல்கின்றன. ஆகையால் விபத்துக்கள் நடக்காமல் இருக்க பாலத்தின் இருபுறத்திலும் வேகத்தடை அமைக்க வேண்டும். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனுவும் அளிக்கப்பட்டுள்ளது.

விபத்தில் சிக்குகிறார்கள்

குடும்ப தலைவி சந்தியா:-

விளக்குடி மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பொருட்கள் வாங்குவதற்கும் மற்றும் திருமணம் மற்றும் விசேஷ நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கும் இந்த பாலத்தின் வழியாகத்தான் விளக்குடி செல்ல வேண்டி உள்ளது. மேலும் திருத்துறைப்பூண்டியிலிருந்து மேட்டுப்பாளையம், ராயநல்லூர், விளக்குடி செல்பவர்கள் இந்த பாலத்தின் வழியாக கடந்து செல்கின்றனர். அப்போது வேகமாக வரும் வாகனங்களில் விபத்துகளில் சிக்குகிறார்கள். மேலும் நடந்து செல்பவர்களும் கூட அங்கு உள்ள வளைவில் வாகனங்கள் வரும்போது விபத்துகளில் சிக்கி உள்்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக வேகத்கதடை அமைக்க வேண்டும் என்றார்.


Next Story