அபாயகரமான மரங்களை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை


அபாயகரமான மரங்களை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 15 Oct 2022 12:15 AM IST (Updated: 15 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டியில் அபாயகரமான மரங்களை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

நீலகிரி

ஊட்டி,

ஊட்டி நகராட்சி 2-வது வார்டுக்கு உட்பட்ட சிறுமலர் நகரை சேர்ந்த பொதுமக்கள் பட்பயரில் உள்ள ஊட்டி வடக்கு வனச்சரக அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-

ஊட்டி நகராட்சி பட்பயர் 2-வது வார்டிற்கு உட்பட்ட சிறுமலர் நகர் குடியிருப்பு பகுதியில் வளர்ந்து உள்ள ராட்சத கற்பூர மரங்களால் பொதுமக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர். மழைக்காலங்களில் இந்த மரங்கள் குடியிருப்பு மேல் விழுவதால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஒரு மரம் குடியிருப்பு மீது விழுந்தது. இதனால் குடியிருப்பு சேதம் அடைந்துள்ளது. எனவே, சிறு மலர் குடியிருப்பு பகுதிகளில் உள்ள அபாயகரமான மரங்களை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story