சுடுகாட்டுக்கு செல்லும் பாதையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை


சுடுகாட்டுக்கு செல்லும் பாதையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
x

கடையம் அருகே சுடுகாட்டுக்கு செல்லும் பாதையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தென்காசி

கடையம்:

கடையம் யூனியன் பாப்பான்குளம் ஊராட்சியில் பல்வேறு தரப்பினர் வசித்து வருகின்றனர். இங்கு ஆற்றங்கரை ஓரத்தில் உள்ள சுடுகாட்டை பல்வேறு சமுதாயத்தினர் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சுடுகாட்டிற்கு செல்லும் சாலை குண்டும் குழியுமாக மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது. மழைக்காலங்களில் வழுக்கி விழும் நிலையும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை பார்வையிட்டு அப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி புதிய சாலை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இதுதொடர்பாக அப்பகுதி மக்கள், நேற்று ஆய்வுக்கு வந்த மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு கொடுத்தனர்.


Next Story