கழிவுநீர் கால்வாய்களை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை


கழிவுநீர் கால்வாய்களை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
x
திருவள்ளூர்

பள்ளிப்பட்டு,

பள்ளிப்பட்டு பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் உள்ள கழிவுநீர் கால்வாய்கள் சரியாக தூர்வாரப்படாமல் அதில் குப்பைகள் ஆங்காங்கே அடைத்து கழிவுநீர் செல்லாமல் தேங்கி நிற்கிறது. இதனால் பல இடங்களில் கழிவுநீர் குளம்போல தேங்கி நிற்கிறது.

சில நாட்களாக மழை பெய்து வருவதால் கழிவுநீரில் கொசுக்கள் உற்பத்தியாகி பள்ளிப்பட்டு நகரம் முழுவதும் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

எனவே உடனடியாக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கால்வாய்களை தூர்வார வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


Next Story