பந்தலூரில் சாக்கடை கால்வாயை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை


பந்தலூரில் சாக்கடை கால்வாயை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 4 Feb 2023 12:15 AM IST (Updated: 4 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பந்தலூரில் சாக்கடை கால்வாயை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

நீலகிரி

பந்தலூர்

பந்தலூர் தோட்டதொழிலாளர்கள் வங்கிவழியாக பாறைக்கல் பகுதிக்கு சிமெண்டு சாலை செல்கிறது. வங்கியை ஒட்டி ஏராளமான பொதுமக்கள் குடியிருந்து வருகின்றனர். இந்தபகுதி பொதுமக்கள் அவசரதேவைகளுக்கு அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கும் ரேஷன் பொருட்கள் வாங்குவதற்கும் ஆஸ்பத்திரி செல்வதற்கும் பந்தலூர் பஜாருக்குதான் சென்று வரவேண்டும். இந்தநிலையில் வங்கி பொதுமக்கள் குடியிருப்பை ஒட்டி கழிவு நீர்கால்வாய் செல்கிறது. இந்த கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் கழிவுநீர் மேற்கொண்டு செல்லாமல் தேங்கி நி்ற்கிறது. இதனால் பொதுமக்களும் மாணவ மாணவிகளும் அவதிப்படுகின்றனர். அதனால் கழிவுநீர் கால்வாயை தூர்வாரி கழிவுநீர் தங்குதடையின்றி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். மேலும் பழுதான சாக்கடை கால்வாயை சீரமைக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி உள்ளார்கள்.


Next Story