பெண்ணாடம் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் திடீர் தர்ணா


பெண்ணாடம் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் திடீர் தர்ணா
x

வீட்டுமனைப்பட்டா கேட்டு பெண்ணாடம் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர்

பெண்ணாடம்,

பெண்ணாடம் அடுத்த சிறுமங்கலம் கிராமத்தில் அருந்ததியர் இன மக்கள் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதில் ஒன்றுக்கு மேற்பட்ட குடும்பத்தினர் ஒரே வீட்டில் வசித்து வருவதால் அதே பகுதியில் உள்ள தோப்பு புறம்போக்கு நிலத்தில் வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி திட்டக்குடி தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்ப்பு கூட்டத்தில் சுமார் 77 குடும்பத்தினர் மனு கொடுத்திருந்தனர். ஆனால் அந்த மனுமீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதையடுத்து இந்திய ஐக்கிய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் கோகுலகிறிஸ்டீபன் தலைமையில் பெண்ணாடம் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு அருந்ததியின மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றிய தகவல் அறிந்து வந்த வருவாய் ஆய்வாளர் சாந்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது குறிப்பிட்ட நிலத்தில் வீட்டு மனைப்பட்டா வழங்குவதற்கு தாலுகா அலுவலகத்திற்கு பரிந்துரை கடிதம் அனுப்புவதாக உறுதி அளித்தார். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்துசென்றனர். இதனால் பெண்ணாடம் வருவாய் அலுவலகம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது.


Next Story